Header Ads Widget

மார்ச் மாதம் நிறுத்தப்படும் அஸ்வெசும கொடுப்பனவு..

அஸ்வெசும கொடுப்பனவு காலம் அதிகரிக்கப்படுமா??

கடந்த ஜனவரி மாதம் அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டு வழங்கபபட்டது. 8500 ரூபா கொடுப்பனவு 10,000 ரூபாவாகவும் 15,000 ரூபா கொடுப்பனவு 17,500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படி இன்னும் சில கொடுப்பனவு அதிகரித்திருந்தது. 

அதனை தொடர்ந்து பிப்ரவரி மாத அஸ்வெசும கொடுப்பனவு வழமை போன்று வழங்கப்பட்டது. இதில் மிக முக்கியமான விடயம் மார்ச் மாதத்துடன் 3 லட்சம் பேருடைய கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என கூறப்பட்டது.  அதனை தொடர்ந்து நிறைய மக்கள் இது தொடர்பாக அவர்களுடைய கவலைகளை கூறினார்கள். 

  • எங்களுக்கு காலம் நீடிக்கப்படமாட்டாதா?
  • மீண்டும் நாங்கள் விண்ணப்பம் செய்ய வேண்டுமா?
  • இனி எங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காதா? 

என பல கேள்விகளை எழுப்பி இருந்தார்கள்.  அவர்களுக்கான மகிழ்ச்சி தகவல் தான் இது அதாவது இவர்களுக்கான கொடுப்பனவு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை இந்த அஸ்வெசும கொடுப்பனவு காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே 2025.04.30 ஆம் திகதி வரை அந்த 3 லட்சம் மக்களும் உங்களுடைய கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள முடியும். 

எனவே அஸ்வெசும இணையத்தளத்திற்கு சென்று உங்களுடைய அஸ்வெசும கணக்கு செயலில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

அஸ்வெசும இணையத்தளம் : Click Now 

அஸ்வெசும இணையத்தளத்திற்கு சென்று உங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்து உங்களுடைய அஸ்வெசும கணக்கு செயலில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 


மேலதிக சந்தேகங்கள் இருந்தால் நமது வட்சப் குழுவில் இணைந்து அட்மினை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

வட்சப் லிங் கீழே உள்ளது. 

அஸ்வெசும தகவல்கள் 1️⃣ Join here

அஸ்வெசும தகவல்கள் 2️⃣ Join here

அஸ்வெசும தகவல்கள் 3️⃣ Join here



Post a Comment

0 Comments